9789810597894 சிங்கப்பூர் விலங்குத் தோட்டக் கதைகள்
Singapore Zoo Stories (P1 & P2)(Tamil) | Singapore Tamil Books

Singapore Zoo Stories (P1 & P2)(Tamil)

  • $5.00
    Unit price per 
  • Save $2
Tax included. Shipping calculated at checkout.
[sku]: 9789810597894
Author: Singapore Zoo & Teachers Network
Publication Date: 1/1/2008
Publisher: Singapore Zoo
Series: Wildlife Reserves Singapore Series

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவின் தமிழ்க் கதைத்தொகுப்பானது விலங்கியல் பூங்காவிலுள்ள விலங்குகளை வைத்து எழுதப்பட்ட நான்கு கதைப்புத்தகங்களையும் அவற்றுக்கான தொடர் நடவடிக்கைகளைக் கொண்ட இரண்டு புத்தகங்களையும் ஒரு சித்திரக்கதைப் புத்தகத்தையும் கொண்டது. இதிலுள்ள கதைகள் ஜாட்டி என்ற யானை, குணா என்ற சிங்கம், குட்டையான வால் என்றழைக்கப்படும் பபூன் குரங்கு மற்றும் இனுக்கா என்றழைக்கப்படும் பனிக்கரடி ஆகியவற்றின் சாகசங்களைச் சித்தரிக்கின்றன. சித்திரப்புத்தகமானது சிங்கப்பூரின் விலங்கியல் பூங்காவிலுள்ள விலங்குகளைச் சித்தரிக்கும் வண்ணம் அழகான வண்ணப்படங்களுடன் ஒரு நல்ல தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடக்கநிலை ஒன்று மற்றும் இரண்டில் பயிலும் மாணவர்களுக்குப் பொருத்தமானதாக உள்ளது. இதனுடன் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட கற்பித்தல் வளங்களைக் கொண்ட தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி ஆசிரியர்களும் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்கச் செய்யலாம். பதினாறு தமிழாசிரியர்களைக் கொண்ட குழுவால் எழுதப்பட்ட இக்கதைத்தொகுப்பு தொடக்கநிலை ஒன்று மற்றும் இரண்டாம் நிலைப் பாடத்திட்டத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

We Also Recommend